Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 3 இடம்

கோவை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 3 இடம்

By: vaithegi Sun, 26 June 2022 3:07:53 PM

கோவை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 3 இடம்

தமிழகம்: தமிழகத்தில் கொரோனா பரவல் சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 23 ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு 1000த்தை தாண்டிய நிலையில் நேற்று ஒரே நாளில் 1,382 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் உச்சகட்ட கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. கோவையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் மொத்தமாக 347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மாவட்ட ஆட்சியர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டது.மேலும் தினசரி பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் பல கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பரிசோதனை,தடுப்பூசி,கொரோனா ,பரிசோதனை ,தடுப்பூசி,கொரோனா

அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது காய்ச்சல் பரிசோதனை கிருமி நாசினி வைத்தல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் பொதுஇடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாமல் இருந்தால் பொது சுகாதார சட்டத்தின் கீழ் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அவர்களின் உடன் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும்.

மேலும், பொதுமக்கள் காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் 12-14 வயது வரை உள்ளவர்கள் Corbevax தடுப்பூசி, 15-18 வயது உடையவர்கள் Covaxin தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :