Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு காய்கறிகள் மொத்த விற்பனை அங்காடி நாளை முதல் திறப்பு

கோயம்பேடு காய்கறிகள் மொத்த விற்பனை அங்காடி நாளை முதல் திறப்பு

By: Nagaraj Sun, 27 Sept 2020 5:57:03 PM

கோயம்பேடு காய்கறிகள் மொத்த விற்பனை அங்காடி நாளை முதல் திறப்பு

நாளை முதல் திறப்பு... கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கறிகள் மொத்த விற்பனை அங்காடி நாளை முதல் திறக்ககப்பட உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, அங்கு செயல்பட்டு வந்த காய்கறி மற்றும் பழ அங்காடி திருமழிசைக்கு மாற்றப்பட்டன. இதற்கிடையே கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்ககோரி வியாபரிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோயம்பேடு காய்கறிகள் மொத்த விற்பனை அங்காடி நாளை முதல் செயல்பட உள்ளது.

merchants,demand,sale,vegetables,cleaning ,வியாபாரிகள், கோரிக்கை, விற்பனை, காய்கறிகள், சுத்தம்

இதனால், கோயம்பேடு வளாகத்தில் உள்ள சாலைகள் ஒரு வழி பாதைகயாக மாற்றப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் அனைவரும் உரிய பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். இன்று இரவு 9 மணி முதல் சரக்கு வாகனங்கள் கோயம்பேடு காய்கறி வளாகத்தில் அனுமதிக்கப்படுகிறது. சரக்கு வாகனங்கள் முழுவதுமாக சானிடைசர் செய்யப்பட்ட பின்பு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை உள்ளே அனுமதிக்கப்படும்.

வாகனங்கள் முறையாக கிருமிநாசினி செய்யப்பட்ட வேண்டும், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் முழுவதுமாக சுத்தம் செய்யும் பணி நடைபெறும் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வரை காய்கறிகள் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. விரைவில் சில்லறை விற்பனைக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|
|