Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாய்களால் வேட்டையாடப்படும் கோலா கரடிகள்; எச்சரிக்கை விடுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள்

நாய்களால் வேட்டையாடப்படும் கோலா கரடிகள்; எச்சரிக்கை விடுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள்

By: Nagaraj Tue, 20 Oct 2020 2:16:55 PM

நாய்களால் வேட்டையாடப்படும் கோலா கரடிகள்; எச்சரிக்கை விடுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை... ஆஸ்திரேலியாவின் கலாச்சார அடையாளமாகத் திகழும் கோலாக் கரடிகள் வேகமாக அழிவைச் சந்தித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் மட்டும் காணக்கூடிய பாலூட்டி இனம் கோலா கரடி. இது தண்ணீர் குடிக்காது. அது உண்ணும் யூகலிப்டஸ் இலைகளிலிருந்தே தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்கின்றன. ஒரு நாளைக்கு 19 மணி நேரம் தூங்கும் தன்மையுடையவை. ஆஸ்திரேலியாவில் காணப்படும் தனித்துவமான பாலூட்டி இனமான கோலா கரடி தற்போது வேகமாக அழிந்து வருகின்றன.

தற்போது ஆஸ்திரேலியாவில் மொத்தமே சுமார் 50,000 கோலா கரடிகள் தான் வசிக்கின்றன என்று எச்சரித்துள்ளனர். யூகலிப்டஸ் மரங்கள் தான் கோலா கரடிகளின் முக்கிய வாழ்விடம் மற்றும் உணவு. புதிதாக உருவாக்கப்படும் பண்ணைகளால் கோலா கரடிகளின் வாழ்விடங்கள் சூறையாடப்படுகின்றன. வறட்சி, புதர் தீ, கால நிலை மாற்றம், வாழ்விடம் அழிதல் போன்ற காரணங்களால் கோலா கரடிகளின் எண்ணிக்கை வேகமாகச் சுருங்கி வருகிறது.

bears,try,alert,dogs,hunt ,கோலாக்கரடிகள், முயற்சி, எச்சரிக்கை, நாய்கள், வேட்டை


இந்த ஆண்டு மட்டும், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட புதர் தீயில் சிக்கி 10 சதவிகித கோலா கரடிகள் அழிந்துள்ளன. இதே நிலை நீடித்தால் 2050 - ம் ஆண்டுக்குள் கோலா கரடிகள் ஆஸ்திரேலியாவில் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளனர்.

வனவிலங்கு சேவை தன்னார்வலரான ட்ரேசி, “கோலா கரடிகளின் வாழ்விடங்களில் அதிகமான குடியிருப்புகள் உருவாகின்றன. அங்குள்ள மக்கள் வசிக்கும் நாய்களால் கோலா கரடிகள் வேட்டையாடப்பட்டு அழிகின்றன. இந்த நிலை நீடித்தால் விரைவில் கோலா கரடிகளை நாம் இழக்க வேண்டியிருக்கும்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அழிந்து வரும் கோலா கரடிகளைக் காப்பாற்றி, அவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகள் ப்ளூ மவுண்டெயின்ஸ் கோலா ப்ராஜெக்ட் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags :
|
|
|
|