Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க தினமும் 2,000 பேரிடம் சளி மாதிரி பரிசோதனை

நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க தினமும் 2,000 பேரிடம் சளி மாதிரி பரிசோதனை

By: Monisha Mon, 12 Oct 2020 10:56:25 AM

நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க தினமும் 2,000 பேரிடம் சளி மாதிரி பரிசோதனை

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டத்துக்குள் இயக்கப்படும் அரசு பஸ்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயணிகள் பயணம் செய்வதை உறுதி செய்ய போக்குவரத்துத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி தென்படும் நபர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை மேற்கொள்ள கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் பரிசோதனை செய்வதற்காக மாவட்ட எல்லைகளான குஞ்சப்பனை, காட்டேரி சோதனைச் சாவடிகளில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

nilgiris,cold sample test,corona virus,treatment ,நீலகிரி,சளி மாதிரி பரிசோதனை,கொரோனா வைரஸ்,சிகிச்சை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தினமும் 2,000 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 700 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து நீலகிரியில் கொரோனா உறுதியான நபர்களுக்கு சிகிச்சை அளிக்க 1,500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுவதால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Tags :