Advertisement

அடுத்த 1 வாரத்திற்கு வட மாநிலங்களில் குளிர் அலை வீசும்

By: vaithegi Fri, 13 Jan 2023 6:23:54 PM

அடுத்த 1 வாரத்திற்கு வட மாநிலங்களில் குளிர் அலை வீசும்

இந்தியா : குளிர் அலை வீசும் .... இந்தியா முழுவதும் தற்போது கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி . உத்தரபிரதேசம், பீகார், உள்ளிட்ட பல வடமாநிலங்களில் குளிர் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.

இதையடுத்து அடுத்த 1 வாரத்திற்கு வட மாநிலங்களில் குளிர் அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வட மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் எப்போதும் இல்லாத அளவு குளிர் நிலவுகிறது.

india,cold ,இந்தியா ,குளிர்

அதனைத்தொடர்ந்து அதிகாலை நேரங்களில் மூடு பனி சூழ்கிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் ஜனவரி 17-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்‌ என நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களின்‌ மலைப்பகுதிகளில்‌ இரவு நேரங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ உறை பனிக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் உள்‌ மாவட்டங்களில்‌ குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல்‌ 3 டிகிரி செல்‌சியஸ்‌ குறைவாக இருக்கக்கூடும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. காலை வேளையில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|