Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் உயர்நீதிமன்றம் தெரிவிப்பு

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் உயர்நீதிமன்றம் தெரிவிப்பு

By: vaithegi Mon, 31 Oct 2022 8:05:42 PM

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம்  உயர்நீதிமன்றம் தெரிவிப்பு

இந்தியா: நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் .... இந்தியாவில் கல்வியை மாணவர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் என பல தரப்பினரும் போராடி வரும் நிலையில் சில பள்ளி, கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை தாண்டி நன்கொடை என்ற பெயரில் அதிக தொகையை வசூலித்து கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக சில தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது நன்கொடை அளித்தால் மட்டுமே சீட்டு வழங்கி கொண்டு வருகின்றனர்.

மேலும் சில பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டாயத்தின் பேரில் நன்கொடை வசூலித்து வருகின்றனர். ஏற்கனவே மக்கள் கொரோனா காலத்தில் சந்தித்த ஊரடங்கு போன்றவைகளால் பொருளாதார ரீதியாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நேரத்தில் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களிடம் நன்கொடை வசூலிப்பது முறையற்றதாக இல்லை என பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

high court,donation ,உயர்நீதிமன்றம் ,நன்கொடை

தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நன்கொடைக்கு வசூலிப்பது இயல்பான ஒன்றாகி வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து இது போன்று கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கவும் , விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்கவும் இணையதளத்தை உருவாக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :