Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் - முதல்வர் நாராயணசாமி

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் - முதல்வர் நாராயணசாமி

By: Monisha Mon, 13 July 2020 5:21:45 PM

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் இன்று (நேற்று) 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முத்தியால்பேட்டை மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தேன். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்களுடன் கலந்து பேசினேன். தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரது வீட்டை சுற்றி 25 மீட்டர் தூரம் வரை தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டு வந்தது. இதை தவிர்த்து பாதித்தவர்கள் வசிக்கும் வீட்டிற்கு இடது, வலதுபுறம் என 3 வீடுகளை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வை செப்டம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பொறியியல், சமூகவியல் உள்பட அனைத்து துறைகளுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தேர்வு நடத்துவது என்பது இயலாத காரியம்.

puducherry,college,graduation,final year,cm narayanasamy ,புதுச்சேரி,கல்லூரி,தேர்ச்சி,இறுதி ஆண்டு,முதல்வர் நாராயணசாமி

சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாது என்பதாலும், நகரப் பகுதி மக்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று உள்ளதை கருத்தில் கொண்டும் ஏற்கனவே செமஸ்டர்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டு துறை மந்திரிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

புதுவை பல்கலைக்கழகத்தில் குறிப்பாக மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் எங்களை சந்தித்து தற்போது நாங்கள் களத்தில் இருந்து பணி செய்து வருகிறோம். எனவே படிப்பதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :