Advertisement

பிரசவத்திற்கு பணமின்றி தவிக்கும் கொலம்பியா பெண்

By: Nagaraj Thu, 20 Aug 2020 11:20:42 AM

பிரசவத்திற்கு பணமின்றி தவிக்கும் கொலம்பியா பெண்

கொலம்பியாவில் இருந்து கனடா வந்த பெண் தற்போது தன் பிரசவத்திற்கு பணம் இல்லாமல் அவதியடைந்து வருகிறார்.

நெருங்கிய உறவினரை சாகக் கொடுத்ததால் மன அழுத்தத்துக்கு ஆளான தனது மகளுக்கு உதவுவதற்காக கனடாவுக்கு வந்தார் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண். சாண்ட்ரா மதீனா என்னும் அந்த தாய், இப்போது 37 வார கர்ப்பிணி. தனது மகள் அலெஜாண்ட்ரா சென்ஸ்க்கு உதவ வந்த இடத்தில் இப்போது எதிர்பாராத ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது அவருக்கு.

குழந்தை பெறுவதற்காக அவர் சொந்த நாட்டுக்கு திரும்ப இருந்த நேரத்தில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எல்லைகள் மூடப்பட, இப்போது பிரசவத்தை மகிழ்ச்சியுடன் எதிர்பார்ப்பதற்கு பதிலாக பயந்திருக்கிறார் சாண்ட்ரா.

colombia,canada,childbirth,suffering,civilians ,கொலம்பியா, கனடா, பிரசவம், தவிப்பு, பொதுமக்கள்

சாண்ட்ரா கனடாவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டாலும், அவரால் தன் தாய்நாட்டுக்கு திரும்ப முடியாது, காரணம் கொலம்பிய எல்லைகளும் மூடப்பட்டுதான் இருக்கின்றன. இன்னும் மூன்று வாரங்களில் சாண்ட்ராவுக்கு பிரசவம் நடக்க இருக்கும் நிலையில், அவரது பயத்திற்கு முக்கிய காரணம், அவரிடம் பிரசவத்திற்காக செலவு செய்ய பணம் இல்லை.

கனடாவில் பிரசவத்திற்காக கிட்டத்தட்ட 12,000 டொலர்களுக்கு மேல் ஆகும் என்ற நிலையில், அவரது தாய்நாடான கொலம்பியா வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு காப்பீடு வழங்க இயலாது என தெரிவித்து விட்டது. வேறு வழியே இல்லாமல், தாயும், மகளுமாக பிரசவ செலவிற்காக பொது மக்களின் உதவியை நாடி பணம் சேகரிக்க முடிவு செய்துள்ளார்கள்.

பிரசவத்திற்கு குறுகிய காலமே இருக்கும் நிலையில், அதற்குள் பணம் சேர்ந்து விடுமா என்ற பதற்றத்தில் இருக்கிறார் சாண்ட்ரா.

Tags :
|