Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போராட்டக்காரர்களுடன் வந்து பேசுங்கள்... பங்கரில் இருந்து வெளியே வாங்க

போராட்டக்காரர்களுடன் வந்து பேசுங்கள்... பங்கரில் இருந்து வெளியே வாங்க

By: Nagaraj Tue, 02 June 2020 11:48:53 AM

போராட்டக்காரர்களுடன் வந்து பேசுங்கள்... பங்கரில் இருந்து வெளியே வாங்க

பங்கரில் ஒளிந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனே வெளியே வரவேண்டும். போராட்டக்காரர்களிடம் பேச வேண்டும் என்று சீனா பத்திரிகை ஆசிரியர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்து வரும் உள்நாட்டு போராட்டங்கள் குறித்து சீனா முதல்முறையாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளது. இது தொடர்பாக சீனாவை சேர்ந்த அதிகாரிகள் வரிசையாக டிவிட் செய்து வருகிறார்கள். அதில் சீன அரசுக்கு நெருக்கமான பத்திரிக்கையான தி குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஹு அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

heavy criticism,newspaper editor,china,president trump ,கடும் விமர்சனம், பத்திரிகை ஆசிரியர், சீனா, அதிபர் டிரம்ப்


அமெரிக்காவில் சமத்துவமற்ற நிலைமை இருக்கிறது. அதிபர் டிரம்ப் அங்கு போராட்டங்களை பார்த்து பயந்து ஒளிந்து கொண்டார். அவர் இப்படி ஒளிந்து கொள்வது தவறு. உடனே டிரம்ப் பங்கரில் இருந்து வெளியே வர வேண்டும். அவர் நேரடியாக சென்று போராட்டக்காரர்களிடம் பேச வேண்டும். அவர்களிடம் உரையாட வேண்டும். பாதுகாவலர்களுக்கு பின்னால் அவர் ஒளிந்து கொள்ளக் கூடாது.

ஹொங்கொங்கில் போராட்டம் நடந்த போது அமெரிக்கா அதை விமர்சனம் செய்தது. எங்கள் உள்நாட்டு பிரச்சனையில் தலையிட்டது. இப்போது ஹொங்கொங் போராட்டம் போலவே உங்கள் நாட்டில் ஒரு போராட்டம் நடக்கிறது. போய் பேசுங்கள். இப்படி ஒளிந்து கொள்ளாமல் பேசுங்கள். சீனாவிற்கு கொடுத்த அறிவுரையை நீங்கள் உங்கள் நாட்டில் பின்பற்றுங்கள் என்று ஹு கூறியுள்ளார்.

Tags :
|