Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள் நினைவு நாள்

தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள் நினைவு நாள்

By: Nagaraj Fri, 15 Sept 2023 7:02:22 PM

தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள் நினைவு நாள்

சென்னை: தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச வேண்டும் என்று 'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றிய மறைமலை அடிகள் நினைவு நாள் இன்று.

குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுள் பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவரும். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்தவர். அவரை தமிழ் உலகம் 'தமிழ்க்கடல்' என்றும், 'தனித்தமிழின் தந்தை' என்று தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்ற அந்த வரலாற்று மனிதர்தான் மறைமலை அடிகள்.

1876 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி திருக்கழுக்குன்றத்தில் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் மறைமலை அடிகள். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும், அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார்.

hidden mountain steps,tamil literature,unquenchable thirst,scholarship ,மறை மலை அடிகள், தமிழ் இலக்கியம், தணியாத தாகம், புலமை

பின்னர் தமிழ் மொழி மீது ஏற்பட்ட பெரும் பற்றாலும் தனித்தமிழ் மீது இருந்த ஆர்வத்தாலும் வேதாசலம் என்ற தன் பெயரை தூய தமிழில் மாற்ற விரும்பி 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் - மறை, அசலம் - மலை, சுவாமி என்பதற்கான தூய தமிழ்ச்சொல் அடிகள் என்று மாற்றிக் கொண்டார்.

வெஸ்லியன் மிஷன் என்ற கிறிஸ்துவப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார் மறைமலை அடிகள். அங்கு ஆங்கிலம் முதல் மொழியாக இருந்ததால் ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார். வே. நாரயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுக் கொண்டார். அதோடு நின்று விடாமல் சமஸ்கிருத மொழியையும் நன்கு கற்றறிந்தார். எனவே அவருக்கு மூன்று மொழிகளில் புலமை இருந்தது.

தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த தணியாத தாகத்தால் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பதினொன் கீழ்கணக்கு போன்ற சிரமமான நூல்களையும் தெளிவாக கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே தன்னோடு பழகி வந்த செளந்தரம் என்ற பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் மறைமலை அடிகள்.

Tags :