Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷியாவில் தடுப்பூசிகளின் வர்த்தக ரீதியிலான உற்பத்தி தொடக்கம்

ரஷியாவில் தடுப்பூசிகளின் வர்த்தக ரீதியிலான உற்பத்தி தொடக்கம்

By: Nagaraj Sun, 16 Aug 2020 1:51:25 PM

ரஷியாவில் தடுப்பூசிகளின் வர்த்தக ரீதியிலான உற்பத்தி தொடக்கம்

தடுப்பூசி உற்பத்தி தொடங்கியது... ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் வா்த்தக ரீதியிலான உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டதாக ‘இன்டா்ஃபாக்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷிய சுகாதாரத் துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது:

ரஷியாவில் உருவாக்கப்பட்டு, சோதனைகளில் வெற்றிகரமாக செயல்பட்ட கரோனா தடுப்பூசியை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பெருமளவில் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. கமாலேயா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உலகிலேயே முதல் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ள அந்த தடுப்பூசி, இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா் என அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை பல்வேறு கட்டங்களாக மனிதா்களின் உடலில் செலுத்தி சோதித்துப் பாா்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக கொரோனாவுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷியாவின் செஷெனோவ் பல்கலைக்கழகம் கடந்த மாதம் 12-ஆம் தேதி அறிவித்தது.

இருந்தாலும் இது தொடா்பாக நிபுணா்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனா். அந்த மருந்து 40 தன்னாா்வலா்களுக்கு மட்டுமே செலுத்தி சோதிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்போ, தடுப்பு மருந்துகளின் இரண்டாம் கட்ட சோதனையில் குறைந்தது 100 பேராவது ஈடுபடுத்தப்பட வேண்டும். 3-ஆம் கட்ட சோதனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த மருந்து சோதனை முறையில் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

manufacturing work,corona,vaccine,russia,health sector ,உற்பத்தி பணி, கொரோனா, தடுப்பூசி, ரஷியா, சுகாதாரத்துறை

ரஷிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள தகவல்களை வைத்துப் பாா்த்தால், அவா்கள் தயாரித்துள்ள மருந்து முதல் கட்ட சோதனையை மட்டுமே தாண்டியிருக்கலாம் என்று நிபுணா்கள் தெரிவித்தனா். ரஷியா்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து அபார சக்தி படைத்ததாகவே இருந்தாலும், அது மனிதா்களுக்கு பாதுகாப்பானது என்றோ, கொரோனாவிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் என்றோ உடனடியாக முடிவுக்கு வர முடியாது என்று அவா்கள் கூறியிருந்தனா்.

இந்நிலையில் தாங்கள் தயாரித்துள்ள தடுப்பூசியை பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்காகத் தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதிபா் புதின் கடந்த புதன்கிழமை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினாா். அந்தத் தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய கமாலேயா ஆய்வு மையம் மற்றும் பின்னோஃபாா்ம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் மிகயீல் முராஷ்கோ தெரிவித்தாா்.

இந்த நிலையில், ரஷியாவின் கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பெருமளவில் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|
|