Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முகாம் தொடக்கம்

பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முகாம் தொடக்கம்

By: Nagaraj Mon, 13 July 2020 10:14:04 PM

பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முகாம் தொடக்கம்

பரிசோதனை முகாம் தொடக்கம்... புதுச்சேரியில் பணியுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உப்பளம் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கும், அப்பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது.

health centers,corona,testing camp,public ,
சுகாதார நிலையங்கள், கொரோனா, பரிசோதனை முகாம், பொதுமக்கள்

முகாமை சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் துவங்கி வைத்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் சிறுவர்கள், பொதுமக்களுக்கு பலர் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர்.

இதே போல் அனைத்து சுகாதார நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என அதிமுக சட்டமனற் கட்சி தலைவர் அன்பழகன் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags :
|