Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆண்டின் முதல் நாளிலேயே வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

ஆண்டின் முதல் நாளிலேயே வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

By: vaithegi Sun, 01 Jan 2023 1:25:33 PM

ஆண்டின் முதல் நாளிலேயே வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

இந்தியா: சாமானிய மக்களுக்கு பெரும் பாரமாக இருக்கும் விஷயங்களில் ஒன்று விலை ஏற்றம். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப அனைத்து பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே வணிக கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்த விலை ஏற்றதால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1917க்கு விற்பனையாகிறது. அதே சமயம் மும்பையில் ரூ. 1721க்கும், கொல்கத்தாவில் ரூ.1870க்கும் வணிக சிலிண்டர் விற்பனையாகிறது.

gas cylinder price,india , கேஸ் சிலிண்டர் விலை,இந்தியா

எனினும் ஆண்டின் முதல் நாளே இந்த விலை ஏற்றம் நாளடைவில் வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துமோ என பொதுமக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டில் மட்டும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.153.5 வரை உயர்ந்தது. தற்போது வீட்டு சிலிண்டர் சென்னையில் ரூ. 1068.5 என்ற விலையில் விற்பனையாகிறது. இறுதியாக கடந்த ஜூலை மாதம் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டது.

Tags :