Advertisement

வணிக செயற்கை கோள்கள்: சீனா விண்ணில் செலுத்தியது

By: Nagaraj Mon, 24 July 2023 7:49:38 PM

வணிக செயற்கை கோள்கள்: சீனா விண்ணில் செலுத்தியது

பெய்ஜிங்: வணிக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது சீனா. விண்வெளியில் செயற்கைக்கோள்களை செலுத்துவதில் உலக நாடுகள் போட்டிபோட்டு வருகின்றன.

இதில் அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளின் வரிசையில் சீனாவும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் அங்குள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீனா வணிக ரீதியிலான 2 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது.

business,china,satellites,space ,சீனா, செயற்கைக்கோள்கள், வணிகம், விண்வெளி,  விஞ்ஞானிகள்

க்யான்குன்-1 மற்றும் ஜிங்ஷிடாய்-16 என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள் செரெஸ்-1 வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டன.

சிறிய ரக செயற்கைக்கோள்களை அனுப்ப பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட்டின் 6-வது பயணம் இதுவாகும். இந்த செயற்கைக்கோள்கள் தற்போது சரியான சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Tags :
|