Advertisement

வணிகவரி நிலுவை தள்ளுபடி ...முதல்வர் அறிவிப்பு

By: vaithegi Tue, 10 Oct 2023 2:47:37 PM

வணிகவரி நிலுவை தள்ளுபடி  ...முதல்வர் அறிவிப்பு


சென்னை: ரூ.50,000-க்கு கீழுள்ள வணிகவரி நிலுவை தள்ளுபடி ...இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித்துறையில் பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால் வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் வராமல் உள்ளது, நிலுவையில் உள்ள வரியை வழங்குவதற்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் முன் வைத்தனர். எனவே அதற்காக புதிய வடிவத்தில் சமாதான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

principal,business tax,rebate ,முதல்வர் ,வணிகவரி ,தள்ளுபடி

மேலும் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு வணிகவரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நிலுவைத் தொகை செலுத்துவதில் சலுகை வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 95 ஆயிரம் வணிகர்களுக்கு நிலுவை வரி தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

அதன்படி ரூ.50 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம் 95 ஆயிரம் சிறு வணிகர்கள் பயனடைவார்கள். வணிகர்கள், வணிகவரித்துறை இடையேயான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இச்சமாதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

Tags :