Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடங்களில் தேங்கிய நீர் அகற்றபடும்.... ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடங்களில் தேங்கிய நீர் அகற்றபடும்.... ஆணையர் ராதாகிருஷ்ணன்

By: vaithegi Thu, 30 Nov 2023 3:47:27 PM

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடங்களில் தேங்கிய நீர் அகற்றபடும்.... ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்னையில் தேங்கியுள்ள மழைநீர் விரைவில் வடிந்துவிடும் ...தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றுக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. எனவே இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில பகுதிகளில் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

commissioner radhakrishnan,chennai ,ஆணையர் ராதாகிருஷ்ணன் ,சென்னை

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் விரைவில் வடிந்துவிடும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் பல பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீர் விரைவில் வடிந்துவிடும். மழை பெய்யும்போது தண்ணீர் நிற்பது உண்மை. ஆனால் அவை உடனுக்குடன் வடிகிறது. அம்பத்தூர், கொளத்தூர், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் தேங்கிய நீரை அகற்றும் பணி நடக்கிறது என அவர் கூறினார்.

Tags :