Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவில் பொருட்கள் விலை உச்சத்தை தொட்டது... மக்கள் வேதனை

கனடாவில் பொருட்கள் விலை உச்சத்தை தொட்டது... மக்கள் வேதனை

By: Nagaraj Wed, 21 Sept 2022 10:40:53 AM

கனடாவில் பொருட்கள் விலை உச்சத்தை தொட்டது... மக்கள் வேதனை

கனடா: கனடாவில் பொருட்களின் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்வுடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

மளிகை பொருட்களின் விலைகள் 1981ம் ஆண்டின் பின்னர் தற்பொழுது பாரியளவில் அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் மளிகைப் பொருட்களின் விலைகள் 10.8 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. எவ்வாறெனினும், கனடாவின் ஆண்டு பணவீக்கம் சற்று குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

cost of living,rise,prices,canada,people,difficulty ,வாழ்க்கைச் செலவு, உயர்வு, விலைகள், கனடா, மக்கள், சிரமம்

மாதாந்த அடிப்படையில் நுகர்வோர் விலைச் சுட்டி ஜுலை மாதத்தை விடவும் ஆகஸ்ட் மாதம் சிறிதளவு குறைவடைந்துள்ளது. பணவீக்கம் குறைவடைந்தமைக்கு எரிபொருள் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் பெரும்பாலும் மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினை உணர்வதாக குறிப்பிடப்படுகின்றது.

விநியோகச் சங்கிலி பிரச்சினை, உக்ரைன் – ரஸ்ய யுத்தம், காலநிலை மாற்றம் மற்றும் மூலப் பொருட்களின் விலைகள் உள்ளிட்ட ஏதுக்களினால் இவ்வாறு வாழ்க்கைச் செலவு உயர்வடைந்துள்ளது.

Tags :
|
|
|
|