Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய கம்யூ., திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன

இந்திய கம்யூ., திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன

By: Nagaraj Tue, 11 Apr 2023 11:16:47 AM

இந்திய கம்யூ., திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன

புதுடில்லி: தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன... இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் சில நிபந்தனைகளை வகுத்துள்ளது. அதன் படி, ஒரு கட்சி தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற, அது நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும் அல்லது அதன் வேட்பாளர்கள் சமீபத்திய தேர்தல்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.

communist of india,india,national party,status, ,அந்தஸ்து, இந்திய கம்யூனிஸ்ட், இந்தியா, தேசிய கட்சி

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் குறைந்தபட்சம் நான்கு எம்.பி.க்களையாவது பெற்றிருக்க வேண்டும். அல்லது லோக்சபா தொகுதிகளில் மூன்று மாநிலங்களுக்கு குறையாமல் மொத்த இடங்களில் 2 சதவீதத்தையாவது பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

இதில் எதையும் நிறைவேற்றாமல் இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேசிய கட்சிகள் என்ற அந்தஸ்தை இழந்தன. அதே நேரத்தில் பஞ்சாபில் சமீபத்தில் ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அந்தஸ்து கிடைத்துள்ளது. பாரத ராஷ்டிரிய சமிதி தேசிய அரசியலை நோக்கி நகரும் நிலையில் ஆந்திராவில் மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது. அதேபோல், புதுச்சேரியிலும் பாட்டாளி மக்கள் கட்சி மாநில அந்தஸ்தை இழந்துள்ளது.

Tags :
|
|