Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த ஆண்டைக் காட்டிலும்,இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்புகளுக்கு 4 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பம்

கடந்த ஆண்டைக் காட்டிலும்,இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்புகளுக்கு 4 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பம்

By: vaithegi Thu, 13 July 2023 2:30:55 PM

கடந்த ஆண்டைக் காட்டிலும்,இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்புகளுக்கு 4 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பம்


சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு நடப்பாண்டில் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர் .. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் தொடங்கியது. www.tnhealth.tn.gov.in மற்றும் www.tn medicalselection.org ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

இதனை அடுத்து ஏராளமான மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் நேற்று ( ஜூலை 12-ம் தேதி) மாலை 5 மணியுடன் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்தது.

mpbs,bds study,application ,எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்பு,விண்ணப்பம்

இந்நிலையில், நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26 ஆயிரத்து 805 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 394 பேரும் என மொத்தம் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்துவுள்ளதாக விண்ணப்பங்களின் நிலவரம் குறித்து மருத்துவக் கல்வி தேர்வுக்குழுச் செயலர் ஆர்.முத்துச்செல்வன் தெரிவித்தார். கடந்தாண்டில் இந்த எண்ணிக்கை 36 ஆயிரமாக இருந்ததாகவும், இந்தாண்டு 4 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் அந்தப் பணிகள் நிறைவடைந்து வருகிற 16-ந் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

Tags :
|