Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரிட்டன் உள்துறை அமைச்சர் தந்தை அளித்த புகார்... கோவா போலீசார் விசாரணை

பிரிட்டன் உள்துறை அமைச்சர் தந்தை அளித்த புகார்... கோவா போலீசார் விசாரணை

By: Nagaraj Sun, 11 Sept 2022 10:36:05 AM

பிரிட்டன் உள்துறை அமைச்சர் தந்தை அளித்த புகார்... கோவா போலீசார் விசாரணை

கோவா: சிறப்பு குழு அமைத்து விசாரணை... கோவாவில் உள்ள தனது பூா்வீக சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் உள்துறை அமைச்சரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சிறப்புக் குழு அமைத்து விசாரித்து வருகின்றனா்.

பிரிட்டன் பிரதமராக அண்மையில் தோ்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ், புதிய உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சூவெல்லா பிரேவா்மனை நியமித்தாா். இந்நிலையில், சூவெல்லாவின் தந்தை கிரிஸ்டி பொ்னாண்டஸ், கோவா அஸ்ஸாகோவில் 13,990 சதுர அடி கொண்ட இரண்டு பூா்வீக இடங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக புகாா் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சிறப்புக் குழு அமைத்து விசாரித்து வருவதாகவும் காவல் துறைக் கண்காணிப்பாளா் நிதி வாசன் தெரிவித்தாா்.

britain,complaint,special committee,department of archaeology,inquiry,native property ,பிரிட்டன், புகார், சிறப்பு குழு, தொல்லியல் துறை, விசாரணை, பூர்வீகச்சொத்து

இந்த நில அபகரிப்பு புகாரை கோவா முதல்வா் பிரமோத் சாவந்த், காவல் துறைத் தலைவா் ஜஸ்பால் சிங், வெளிநாடு வாழ் இந்தியா் ஆணையா் நரேந்திர சவாய்கருக்கு அவா் இ-மெயில் மூலம் அனுப்பி உள்ளாா்.

கோவாவில் நில அபகரிப்பு புகாா்கள் குறித்து விசாரிக்க நிகழாண்டு அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு 100-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து 15-க்கும் மேற்பட்டோரை கைது செய்தது. இதில் மாநில அரசு கருவூலம் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் இருவரும் அடங்குவா்.

Tags :