Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பட்டாசு நேர கட்டுப்பாடு .... அனுமதி அளித்துள்ள நேரத்தை தாண்டி வெடித்தால் இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

பட்டாசு நேர கட்டுப்பாடு .... அனுமதி அளித்துள்ள நேரத்தை தாண்டி வெடித்தால் இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

By: vaithegi Sat, 22 Oct 2022 9:20:48 PM

பட்டாசு நேர கட்டுப்பாடு ....     அனுமதி அளித்துள்ள நேரத்தை தாண்டி வெடித்தால் இந்த  எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

சென்னை: இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம் ..... தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டாசுகளை குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.எனவே அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மொத்தமாக இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இதனை மீறி மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகைக்கு இன்னும் 1 நாளே உள்ள நிலையில் தலைநகர் சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு போன்ற பகுதிகளில் மாநகர காவல் ஆணையர் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

fireworks,diwali ,பட்டாசு ,தீபாவளி

இதனை அடுத்து அப்போது பேசிய அவர், கோயம்பேடு பகுதியில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் பட்டாசு கடைகளின் உரிமங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் அதில் உரிமம் இல்லாமல் யாரேனும் கடை நடத்துவது தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அனுமதி அளித்துள்ள நேரத்தை தாண்டி வெடித்தால் 112 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.


Tags :