Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 9 ஆண்டுகள் பூர்த்தி... வாழ்த்துக்கள் புதிய சக்தியை அளிக்கிறது என பிரதமர் மோடி தகவல்

9 ஆண்டுகள் பூர்த்தி... வாழ்த்துக்கள் புதிய சக்தியை அளிக்கிறது என பிரதமர் மோடி தகவல்

By: Nagaraj Sun, 28 May 2023 09:45:46 AM

9 ஆண்டுகள் பூர்த்தி... வாழ்த்துக்கள் புதிய சக்தியை அளிக்கிறது என பிரதமர் மோடி தகவல்

புதுடில்லி: வாழ்த்துக்கள் புதிய சக்தியை அளிக்கிறது... மத்தியில் தனது அரசு பதவியேற்று 9 ஆண்டுகாலம் பூர்த்தியாவதை முன்னிட்டு தெரிவிக்கப்படும் வாழ்த்துகள், மக்களுக்காக மேலும் தீவிரமாக பணியாற்றுவதற்கான சக்தியை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி முதல்முறையாக பிரதமர் மோடி தலைமையில் அரசு பதவியேற்றது. இதையடுத்து 2வது முறையாக 2019ம் ஆண்டு மே 30ம் தேதி அவரது தலைமையில் அரசு பதவியேற்றது. அவரது அரசு பதவியேற்று வரும் 30ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

peoples love,comments,pm modi,registration,work done by the government ,மக்கள் அன்பு, கருத்துக்கள், பிரதமர் மோடி, பதிவு, அரசு செய்த பணி

இதை சுட்டிகாட்டி, ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 2014ம் ஆண்டு முதல் தனது அரசு செய்த பணிகளை பாராட்டி 9YearsOfModiGovernment என்ற ஹேஸ்டேக்குடன் மக்கள் கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும், இதுபோன்ற மக்களின் அன்பை எப்போதும் தாழ்மையுடன் ஏற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்

Tags :