Advertisement

மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு நிறைவு

By: vaithegi Thu, 28 Sept 2023 12:18:50 PM

மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு நிறைவு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்களுக்கு நடப்பாண்டிலிருந்து காலாண்டு உட்பட அனைத்து தேர்வுகளுக்கும் பொது வினாத்தாள் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அந்தவகையில் 11, 12-ம் வகுப்புக்கு கடந்த செப்.15-ம் தேதியும், 6 முதல் 10-ம்வகுப்புக்கு செப்.19-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு கடந்த செப்.20-ம் தேதியும் காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் தொடங்கின. இதையடுத்து இதில்1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் எண்ணும், எழுத்தும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் செல்போன் செயலி வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டன.

quarterly examination,schools ,காலாண்டுத் தேர்வு ,பள்ளிகள்

இந்த நிலையில் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதையடுத்து மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை இன்று முதல் தொடங்கி உள்ளது. விடுமுறை முடிந்து மீண்டும் 2-ம்பருவத்துக்கான பள்ளிகள் அக். 3-ம் தேதி முதல் திறக்கப்படவுள்ளன.

இதன் இடையே தொடக்கப் பள்ளிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி நடைபெறவுள்ளது. அதனால் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டது. அவர்களுக்கு வகுப்புகள் வருகிற அக்.9-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது

Tags :