Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம்... பள்ளி கல்வித்துறை ஆணையர்

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம்... பள்ளி கல்வித்துறை ஆணையர்

By: vaithegi Fri, 24 June 2022 2:47:58 PM

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம்... பள்ளி கல்வித்துறை ஆணையர்

தமிழகம் : 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலமாக மேல்நிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கல்வி ஆணையர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இவர் உத்தரவுப்படி, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

school education,reservation ,பள்ளி கல்வித்துறை,இட ஒதுக்கீடு

மேலும், மேல்நிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் 11ம் வகுப்பில் ஒவ்வொரு பாடபிரிவிலும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டியது கட்டாயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதிலிருந்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனியார் பள்ளிகளுக்கு இந்த உத்தரவு பொருந்துமா என்பதை சரியாக குறிப்பிடவில்லை. அதனால் இது குறித்து சரியான விளக்கம் வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனார்.

Tags :