Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியலைன்னு சொன்ன பாகிஸ்தான் நடிகைக்கு குவியும் கண்டனம்

இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியலைன்னு சொன்ன பாகிஸ்தான் நடிகைக்கு குவியும் கண்டனம்

By: Nagaraj Fri, 17 Nov 2023 10:57:40 PM

இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியலைன்னு சொன்ன பாகிஸ்தான் நடிகைக்கு குவியும் கண்டனம்

இஸ்லாமாபாத்: கடும் கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்... இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை என்று பாகிஸ்தான் நடிகை பதிவிட்டதால் அவர் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி மும்பையில் நடந்த போது, இந்திய – நியூசிலாந்து அணிகள் மோதின. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சதம், முகமது ஷமியின் பந்துவீச்சு ஆகியவை இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தன. அதனால் இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியை பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்த விஷயத்தை பாகிஸ்தான் நடிகை சாஹர் ஷின்வானி ஏற்கவில்லை.

heavy criticism,india,finalist,actress,pakistan ,கடும் கண்டனம், இந்தியா, இறுதி ோட்டி, நடிகை, பாகிஸ்தான்

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், 'இந்திய அணி அரையிறுதி போட்டியில் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தியா ஏன் நம்மை விட எல்லாவற்றிலும் முன்னோக்கி செல்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவு, சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நெட்டிசன்கள் நடிகைக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அவர்களில் சிலர் நடிகையை ட்ரோல் செய்து வருகின்றனர். அவற்றில் சிலர், 'அழுது கொண்டே இருங்கள்' என்றும், 'நீங்கள் மேம்பட இன்னும் அதிக காலம் தேவை' என்றும் பலவாறாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியைப் பற்றி, சாஹர் ஷின்னானி இவ்வாறு விமர்சிப்பது ஒன்றும் புதிதல்ல; ஏற்கனவே பலமுறை விமர்சித்து கடும் கண்டனங்களையும் எதிர் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|