Advertisement

வணிக எரிவாயு வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம்

By: Nagaraj Mon, 02 Jan 2023 10:15:07 AM

வணிக எரிவாயு வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம்

புதுடெல்லி: வணிக எரிவாயு வணிக சிலிண்டர் புத்தாண்டு நாளிலேயே விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று வர்த்தக சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை ரூ.25.50 அதிகரித்து ரூ.1,917க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் ரூ.1768க்கும், மும்பையில் ரூ.1721க்கும், கொல்கத்தாவில் ரூ.1870க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால், உணவகங்கள் பாதிக்கப்படும். உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

condemn,fuel,opposition parties, ,எதிர்க்கட்சிகள், எரிபொருள், கண்டனம், கேள்வி

புத்தாண்டின் முதல் பரிசாக வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் விலை தற்போது ரூ.25 உயர்ந்துள்ளது. இது ஆரம்பம்தான்’ என காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை உயர்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 2014ல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை, 410 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்த தொடர் எரிபொருள் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது. எரிபொருள் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

ஆனால் கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலையை அரசாங்கம் சுட்டிக்காட்டியது. ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் ஏன் விலை குறைக்கப்படவில்லை? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

Tags :
|