Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜ நிர்வாகி பாலாஜி உத்தம ராமசாமிக்கு நிபந்தனை ஜாமீன்

பாஜ நிர்வாகி பாலாஜி உத்தம ராமசாமிக்கு நிபந்தனை ஜாமீன்

By: Nagaraj Fri, 30 Sept 2022 10:01:50 PM

பாஜ நிர்வாகி பாலாஜி உத்தம ராமசாமிக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: பாஜக நிர்வாகி பாலாஜி உத்தம ராமசாமி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 15 நாட்களுக்கு பீளமேடு காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தந்தை பெரியார் குறித்தும், தமிழக முதலமைச்சர் குறித்தும் அவதுாறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கோவையில் தமிழக முதலமைச்சர் பற்றியும், தந்தை பெரியார் பற்றியும் அவதுாறக பேசியதற்காக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

order,judge,signature,conditional bail,petition ,உத்தரவு, நீதிபதி, கையெழுத்து, நிபந்தனை ஜாமீன், மனுதாக்கல்

அவர் மீது கலகத்தை துாண்டுதல், அவதுாறு பரப்புதல் போன்றவற்றிலும், வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அவருடைய ஜாமீன் மனுவை மாவட்ட நீதிபதி ராஜசேகர் விசாரித்தார்.

தொடர்ந்து நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். மேலும் பாலாஜி உத்தம ராமசாமி 15 நாட்களுக்கு பீளமேடு காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
|
|