Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துக ஓபிஎஸ் வலியுத்தல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துக ஓபிஎஸ் வலியுத்தல்

By: vaithegi Wed, 31 May 2023 12:32:19 PM

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துக ஓபிஎஸ் வலியுத்தல்


சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் தொகுதி-4 தேர்வுக்கான தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வந்துள்ள நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தவும் தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுத்தல் ...

இதையடுத்து அந்த அறிக்கையில், அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் காலியாக உள்ள 3.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுயிருக்கிறது. ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 10,000 காலிப் பணியிடங்கள்கூட நிரப்பப்படவில்லை.இது அரசுப் பணியை எதிர்பார்த்திருந்த இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

ops,tnpsc group 4 ,ஓபிஎஸ் ,டிஎன்பிஎஸ்சி குரூப் 4


தி.மு.க. வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், 2 , 3 ஆண்டுகள் தேர்வு நடத்தப்படாதது மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அரசு நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்தியும், 2022ம் ஆண்டு தொகுதி-4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 15,000 காலிப் பணியிடங்களை நிரப்பவும், 2023 ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வை இந்தாண்டே நடத்தி அதன்மூலம் 50,000 காலிப் பணியிடங்களை நிரப்பவும், இனி வருங்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வினை நடத்தி, உடனுக்குடன் முடிவுகளை வெளியிட்டு, காலியாக உள்ளஅனைத்துப் பணியிடங்களை நிரப்பவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’ என அவர் தெரிவித்து உள்ளார்.

Tags :
|