Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க கூடாது ..நடத்துநர்களுக்கு உத்தரவு பிறப்பிப்பு

பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க கூடாது ..நடத்துநர்களுக்கு உத்தரவு பிறப்பிப்பு

By: vaithegi Wed, 27 Sept 2023 09:00:10 AM

பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க கூடாது   ..நடத்துநர்களுக்கு உத்தரவு பிறப்பிப்பு

சென்னை: ரூ.2,000 நோட்டுக்களை பொதுமக்களிடமிருந்து 28- ஆம் தேதிக்கு பிறகு வாங்கக்கூடாது என அரசு விரைவு போக்குவரத்து கழகம் கிளை மேலாளர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள், 2016 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டன, ஆனால், இவை வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே செல்லும் அதன்பின் செல்லாது என ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்தது.

conductor,bus,notes ,நடத்துநர்,பேருந்து,நோட்டுகள்

இதனால் பலரும் தங்களிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து மாற்றி வந்தனர். ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு, இன்னும் 5 நாட்களில் முடிகிறது. இவ்வாரத்தில் வரும் 26, 27, 29, 30 ஆகிய நாட்களில் மட்டுமே வங்கிகள் இயங்கும். 28-ம் தேதி மிலாது நபிக்காக, விடுமுறை.

எனவே இதன் காரணமாக 28ஆம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :
|