Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விஜயகாந்த் உடல்நிலை குறித்து வேறுவேறு அறிக்கையால் குழப்பம்

விஜயகாந்த் உடல்நிலை குறித்து வேறுவேறு அறிக்கையால் குழப்பம்

By: Nagaraj Thu, 24 Sept 2020 4:29:22 PM

விஜயகாந்த் உடல்நிலை குறித்து வேறுவேறு அறிக்கையால் குழப்பம்

விஜயகாந்த் உடல்நிலை குறித்து இருவேறு அறிக்கையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தேமுதிக தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.

விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி மட்டுமே இருந்த நிலையில் அது சரியாகி விட்டதாக தேமுதிக அறிவித்த நிலையில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் விஜயகாந்த் உடல் நிலை குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், வழக்கமாக 6 மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு விஜயகாந்த் சென்றபோது லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும் உடனடியாக அது சரிசெய்யப்பட்டு விட்டது என்றும் தேமுதிக தெரிவித்தது. தற்போது விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் என்று தேமுதிக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

corona,report,vijayakant,hospital ,கொரோனா, அறிக்கை, விஜயகாந்த், மருத்துவமனை

இந்நிலையில், மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 22ம் தேதி சோதனையில் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை சீராக உள்ளது. கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி சரியாகிவிட்டதாக தேமுதிகவும், கொரோனா இருப்பதாக மியாட் மருத்துவமனையும் அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளதால் அவரது உடல் நிலை குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சி தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags :
|
|