Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதிப்பு குறித்த ஈரான் அதிபர் கூறிய தகவலால் குழப்பம்

கொரோனா பாதிப்பு குறித்த ஈரான் அதிபர் கூறிய தகவலால் குழப்பம்

By: Nagaraj Sat, 18 July 2020 7:58:11 PM

கொரோனா பாதிப்பு குறித்த ஈரான் அதிபர் கூறிய தகவலால் குழப்பம்

ஈரான் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது அதிபர் வெளியிட்ட அறிவிப்பு. என்ன தெரியுங்களா?

ஈரானில் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என தெரிவித்துள்ள அதிபர் ஹசன் ரவுஹானி, மேலும் மூன்றரை கோடி பேருக்கு தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

அரசு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் இதைத் தெரிவித்துள்ள அவர், சுமார் 14000 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாகவும் தெரிவித்தார்.

president of iran,chaos,corona,number,multiples ,ஈரான் அதிபர், குழப்பம், கொரோனா, எண்ணிக்கை, பலமடங்கு

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் மக்கள் தொகை எட்டு கோடியாக உள்ளது. இதுவரை 2,69,440 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் அதிபர் அதை விட பல மடங்கு அதிகமான எண்ணிக்கையை அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மக்கள் மத்தியில் இது அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|