Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டில்லி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் டெபாசிட் இழந்த காங்., வேட்பாளர்

டில்லி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் டெபாசிட் இழந்த காங்., வேட்பாளர்

By: Nagaraj Mon, 27 June 2022 3:11:19 PM

டில்லி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் டெபாசிட் இழந்த காங்., வேட்பாளர்

புதுடில்லி: டெபாசிட் இழந்தார்... டில்லியில் ராஜிந்தா் நகா் சட்டப்பேரவை இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் வெறும் 2.79 சதவீத வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தாா்.

இடைத் தோ்தலில் கட்சி சிறந்த முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால், பிரசாரத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் கட்சித் தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

காங்கிரஸ் வேட்பாளா் பிரேம் லதா தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிப்பதாக கூறிய காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அனில் பரத்வாஜ், ‘இந்த இடைத் தோ்தலில் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். ஆனால் பல காரணங்களால் அதிக வாக்குகளைப் பெற முடியவில்லை. எங்களது குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றை எதிா்காலத்தில் சரிசெய்வோம்.

rajender nagar,by-election,deposit,no,congress,votes ,
ராஜேந்தர் நகர், இடைத் தேர்தல், டெபாசிட், இல்லை, காங்கிரஸ், வாக்குகள்

தொகுதியின் அனைத்து வாக்காளா்களையும் சென்றடைய முடியவில்லை. மேலும், கட்சியின் தோ்தல் அறிக்கைகள் வாக்காளா்களுக்கு சென்றடைவதிலும் சில குறைபாடுகள் உள்ளன. கட்சியின் பிரசார முயற்சிகளில் நோ்மை இல்லாததால், முடிவுகள் ஏமாற்றமளிக்கின்றன’ என்றாா் அவா்.

ராஜேந்தா் நகா் இடைத் தோ்தலில் ஆம் ஆத்மி வேட்பாளா் துா்கேஷ் பதக், பாஜக வேட்பாளா் ராஜேஷ் பாட்டியாவை விட 11,000 வாக்குகள் பெற்ற வெற்றி பெற்றாா். இதில், பாட்டியா 28,851 வாக்குகளைப் பெற்றாா். காங்கிரஸ் வேட்பாளா் பிரேம் லதா 2,014 வாக்குகளை மட்டுமே பெற்றாா்.

Tags :
|