Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு வாழ்த்து ,இலங்கை மக்களுக்கு முழு அளவில் ஆதரவு வழங்கப்படும் ...பிரதமர் மோடி

புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு வாழ்த்து ,இலங்கை மக்களுக்கு முழு அளவில் ஆதரவு வழங்கப்படும் ...பிரதமர் மோடி

By: vaithegi Tue, 26 July 2022 10:06:19 PM

புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு வாழ்த்து ,இலங்கை மக்களுக்கு முழு அளவில் ஆதரவு வழங்கப்படும் ...பிரதமர் மோடி

புதுடெல்லி: இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னான மிக கடுமையான பொருளாதார நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே (வயது 73) தலைமையிலான அரசு இதை தவறாக கையாண்டது என கூறி போராட்டம் வலுத்தது.

பின் மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். அதிபர் பதவியில் இருந்தும் விலகினார். புதிய அதிபருக்கான தேர்தலில் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராக பதவியேற்று கொண்டார். எனினும், அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வலு பெற்று கொண்டு வருகிறது.

ranil wickremesinghe,pm modi,congratulations ,பிரதமர் மோடி ,ரணில் விக்ரமசிங்கே

இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபரான ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் மோடி கடிதம் வழியே வாழ்த்து தெரிவித்து கொண்டார். அந்த கடிதத்தில், இலங்கையின் 8வது ஜனாதிபதியாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இலங்கைக்கு நெருக்கடியான காலத்தில் நீங்கள் இப்பதவியை ஏற்று இருக்கிறீர்கள். உங்களின் பதவிக்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை மேம்படுவதுடன் இலங்கையின் அனைத்து குடிமக்களின் விருப்பங்களும் நிறைவேறும் என நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் இலங்கையில், நிறுவப்பட்ட ஜனநாயக வழிமுறைகள், அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான தேடலுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் வாழ்த்து கடிதத்தில் பிரதமர் தெரிவித்து உள்ளார்.

Tags :