Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 5 மாநில தேர்தல் குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம்

5 மாநில தேர்தல் குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம்

By: Nagaraj Fri, 13 Oct 2023 06:43:41 AM

5 மாநில தேர்தல் குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம்

டில்லி: மத்திய தேர்தல் குழு கூட்டம்... டில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை அக். 9 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் நவம்பர் 7, நவம்பர் 17 தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மிசோரத்தில் நவம்பர் 7-ஆம் தேதியும் மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25, தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

mizoram,chhattisgarh,candidates states,election,list ,மிசோரம், சத்தீஸ்கர், வேட்பாளர்கள் மாநிலங்கள், தேர்தல், பட்டியல்

இதையடுத்து கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் டில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்தில் மிசோரம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து முடிவெடுக்கப்படுகிறது.

Tags :