Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்

மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்

By: Nagaraj Wed, 18 Oct 2023 6:33:58 PM

மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்

போபால்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு... மத்தியப்பிரதேசத்தில் சாதி கணக்கெடுப்பு, ரூ.25லட்சம் மருத்துவ காப்பீடு உள்பட காங்கிரஸ் கட்சியின் 59 தேர்தல் வாக்குறுதிகள் நேற்று வெளியிடப்பட்டது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் 230 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் மாநில தலைவர் கமல்நாத் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

congress,election,madhya pradesh,publication,report, ,அறிக்கை, காங்கிரஸ், தேர்தல், மத்தியப்பிரதேசம், வெளியீடு

106 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில்,விவசாயிகள், பெண்கள், அரசு ஊழியர்கள், அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் உறுதியளிக்கும் வகையில் மொத்தம் 59 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய மாநில தலைவர் கமல்நாத், ‘‘மாநிலத்தில் மகிழ்ச்சியை கொண்டுவருவதற்கு மகிழ்ச்சி இயக்கம் தொடங்கப்படும். காங்கிரஸ் மகிழ்ச்சியை கொண்டு வரும் என்பதே கட்சியின் புதிய முழக்கமாகும்” என்றார்.

Tags :
|