Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சர் கங்காராம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சர் கங்காராம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

By: Karunakaran Sun, 02 Aug 2020 6:39:00 PM

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சர் கங்காராம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 73 வயதாகிறது. இந்நிலையில் அவர் கடந்த 30-ம் தேதி இரவு 7 மணி அளவில் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

தற்போது கடந்த 30-ம் தேதி டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று பிற்பகல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மூத்த மருத்துவர் ஒருவர் அறிவித்துள்ளார்.

congress interim leader,discharged,kangaram hospital,sonia gandhi ,காங்கிரஸ் இடைக்காலத் தலைவர், டிஸ்சார்ஜ், கங்காரம் மருத்துவமனை, சோனியா காந்தி

இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் டி.எஸ்.ராணா கூறுகையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஜூலை 30-ம் தேதி மாலை 7 மணிக்கு சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று மதியம் 1 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடை நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக அரசியல்வாதிகள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சோனியா காந்தி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :