Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் கட்சி முடிவு

இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் கட்சி முடிவு

By: Nagaraj Sat, 14 Oct 2023 5:26:01 PM

இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் கட்சி முடிவு

போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நாளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாஜக இதுவரை 4 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. மொத்தம் 136 பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

assembly,candidates,congress,contest,election,list,madhya pradesh,release , 130, காங்கிரஸ், சட்டமன்றம், தேர்தல், பட்டியல், போட்டி, மத்திய பிரதேசம், வெளியீடு, வேட்பாளர்கள்

இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. நாளை முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் பட்டியலில் கட்சியின் மாநில தலைவர் கமல்நாத் உட்பட 130 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பட்டியலில் 15 முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் 90 எம்எல்ஏக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|