Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கட்சி தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர்... ராகுல்காந்தி சொல்கிறார்

காங்கிரஸ் கட்சி தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர்... ராகுல்காந்தி சொல்கிறார்

By: Nagaraj Thu, 20 Oct 2022 09:39:21 AM

காங்கிரஸ் கட்சி தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர்... ராகுல்காந்தி சொல்கிறார்

ஆந்திரா: காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர். அவரே அனைத்து முடிவுகளையும் எடுப்பார். காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எனது வாழ்த்துக்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.

நேற்று ஆந்திராவில் விஜய நகரம் மாவட்டத்தில் சாகி கிராமம் முதல் பனவாசி கிராமம் வரை ராகுல் காங்கிரஸ் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார்.

election,rahul gandhi,walk,greeting,congress party,president ,
தேர்தல், ராகுல்காந்தி, நடைபயணம், வாழ்த்து, காங்கிரஸ் கட்சி, தலைவர்

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, “காங்கிரஸ் தலைவரின் பங்கு குறித்து என்னால் கருத்து கூற முடியாது, அது குறித்து கார்கே (கட்சியின் தலைவர் வேட்பாளர்) கருத்து தெரிவிக்க வேண்டும். எனது பங்கு என்ன என்பதை தலைவர் தான் முடிவு செய்வார். காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர். அவரே அனைத்து முடிவுகளையும் எடுப்பார். காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் ஆந்திரா-தெலுங்கானாவை பொறுத்த வரையில், ஆந்திரப் பிரதேச மக்களுக்கு மோடி அரசு சில உறுதிமொழிகளை அளித்துள்ளது. அந்த அடிப்படைக் கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டில் தேர்தல் நடத்தும் மற்றும் தேர்தல் ஆணையத்தை வைத்திருக்கும் ஒரே அரசியல் கட்சி நாங்கள் தான் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags :
|