Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கட்சி சொந்த தலைவர்களை குறி வைக்கக்கூடாது - கபில்சிபல்

காங்கிரஸ் கட்சி சொந்த தலைவர்களை குறி வைக்கக்கூடாது - கபில்சிபல்

By: Karunakaran Fri, 28 Aug 2020 2:06:44 PM

காங்கிரஸ் கட்சி சொந்த தலைவர்களை குறி வைக்கக்கூடாது - கபில்சிபல்

காங்கிரஸ் கட்சிக்கு சுறுசுறுப்பான தலைவரை தேர்வு செய்ய வேண்டும், காங்கிரஸ் கட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சித்தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த விவகாரம் கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில், இந்த கடித விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில், சோனியா தனது பதவி விலகல் விருப்பத்தை அறிவித்தார். ஆனால் அவரே தலைவராக நீடிக்க வேண்டும் என காரிய கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கடிதம் விவகாரம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், கடிதம் எழுதியவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை தெரிவித்து வருகின்றனர்.

congress party,target,own leaders,kapil sibal ,காங்கிரஸ் கட்சி, இலக்கு, சொந்த தலைவர்கள், கபில் சிபல்

இந்த கடிதத்தில் கையெழுத்திட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜிதின் பிரசாதா மற்றும் அவரது குடும்பத்தினர் சோனியா குடும்பத்தினருக்கு எதிராக செயல்படுவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு லகிம்பூர் கேரி மாவட்ட காங்கிரசார் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது கடிதம் எழுதிய தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மூத்த தலைவர்களில் ஒருவரும், அந்த கடிதத்தில் கையெழுத்திட்டர்களில் ஒருவருமான கபில்சிபல் தனது டுவிட்டர் பக்கத்தில், துரதிர்‌‌ஷ்டவசமாக ஜிதின் பிரசாதா உத்தரபிரதேசத்தில் குறி வைக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தனது சொந்த தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது ஆற்றலை வீணாக்குவதற்கு பதிலாக, பா.ஜனதாவைதான் துல்லிய தாக்குதல்களால் குறி வைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|