Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க பரிசீலனை

ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க பரிசீலனை

By: Karunakaran Wed, 09 Sept 2020 1:39:00 PM

ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க பரிசீலனை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷியாவின் கமாலயா நிறுவனம் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது. 3-வது கட்ட மனித பரிசோதனைக்கு தயாராகி வரும் இந்த தடுப்பூசியை, இந்தியாவில் தயாரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசின் தேசிய கொரோனா தடுப்பூசி நிபுணர் குழு தலைவரும், நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவும், அதன் 3-வது கட்ட பரிசோதனையை இங்கு நடத்தவும் பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் ரஷியா கேட்டுக்கொண்டுள்ளது. ரஷியாவின் இந்த பரிந்துரையை பல்வேறு இந்திய நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. மற்ற நிறுவனங்கள் ரஷிய நிறுவனங்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

russia,sputnik 5,corona vaccine,india ,ரஷ்யா, ஸ்பூட்னிக் 5, கொரோனா தடுப்பூசி, இந்தியா

இந்நிலையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் ராணுவ அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கி வரும் ராணுவ மருந்து நிறுவனம் மரபணு ரீதியான தடுப்பூசி ஒன்றை தயாரித்து இருந்தது. இனக்கலப்பு முறையிலான இந்த தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது. கடந்த மாதம் காப்புரிமை பெற்றுள்ள இந்த தடுப்பூசியால் வைரஸ் பிறழ்வு நிலையையும் சரி செய்ய முடியும் என இந்த தடுப்பூசி ஆய்வு குழு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அக்குழுவின் தலைவர் சென் வெய் கூறுகையில், இந்த தடுப்பூசி தயாரிப்புக்கு நிபுணர்கள் எடுத்துக்கொண்ட வைரசின் மரபணு குறைந்தபட்ச பிறழ்வுத்தன்மையே கொண்டது. தற்போது வரை கொரோனா வைரசின் அனைத்து பிறழ்வு தன்மையையும் இந்த தடுப்பூசியால் தடுக்க முடியும். எனினும் தேர்ந்தெடுக்கப்பட்ட மரபணு மாற்றமடைந்து தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மையை பலவீனப்படுத்தினாலும், அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்காக இந்த தடுப்பூசியை பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|