Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர்ந்து கொரோனா நோயாளிகள் தப்பியோடும் சம்பவங்கள்; அச்சத்தில் மக்கள்

தொடர்ந்து கொரோனா நோயாளிகள் தப்பியோடும் சம்பவங்கள்; அச்சத்தில் மக்கள்

By: Nagaraj Sat, 30 May 2020 11:35:24 AM

தொடர்ந்து கொரோனா நோயாளிகள் தப்பியோடும் சம்பவங்கள்; அச்சத்தில் மக்கள்

கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்...சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இரண்டு கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து தப்பியோடியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்புடன், 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிமை சூழல் காரணமாக, பலர், மன ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், சிகிச்சையில் இருந்து தப்பி செல்வது தொடர்ந்து வருகிறது.
இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த, 57 வயது நபர், நேற்று முன்தினம் (மே 28) இரவு தப்பி சென்றார் .

corona,patients,escapes,people,fears ,கொரோனா, நோயாளிகள், தப்பியோட்டம், மக்கள், அச்சம்

அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த, 63 வயது முதியவர் நேற்று (மே 29) தப்பி சென்றார். இதுவரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து, ஐந்துக்கும் மேற்பட்டோர் தப்பி சென்றுள்ளனர்.

அதில், ஒரு சிலரை போலீசார் கண்டுபிடித்து, சிகிச்சை அளித்த நிலையில், மூன்று பேரை தேடி வருகின்றனர். இப்படி கொரோனா வார்டுகளில் இருந்து நோயாளிகள் தப்பியோடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவி விடும் என்பதால் மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|
|