Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 7-ஆம் தேதி வரை கலந்தாய்வு

காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 7-ஆம் தேதி வரை கலந்தாய்வு

By: vaithegi Tue, 31 Oct 2023 4:14:45 PM

காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 7-ஆம் தேதி வரை கலந்தாய்வு

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வு நடத்தி காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக மருத்துவத்துறை அறிவித்து உள்ளது.

இதனை அடுத்து காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு வருகிற நவம்பர் 7-ஆம் தேதி வரை அகில இந்திய கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

clinical places,discussion ,மருத்துவ இடங்கள்,கலந்தாய்வு

மேலும் மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நவம்பர் 7 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பார்வையிட தேர்வுக்குழு செயலாளர்அறிவுறுத்தியுளளார்.

அகில இந்திய ஒதுக்கீடு-16, நிகர்நிலைப் பல்கலைக்கழகம்-50, எய்ம்ஸ்-3, சுயநிதி 17 என 86 இடங்கள் காலியாக உள்ள நிலையில், இதற்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :