Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இமாச்சல பிரதேசத்தில் யார் முதல்வர் என்பதற்காக ஆலோசனை கூட்டம்

இமாச்சல பிரதேசத்தில் யார் முதல்வர் என்பதற்காக ஆலோசனை கூட்டம்

By: Nagaraj Fri, 09 Dec 2022 4:39:17 PM

இமாச்சல பிரதேசத்தில் யார் முதல்வர் என்பதற்காக ஆலோசனை கூட்டம்

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் யார்? என ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தின் 68 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் முக்கியக் கட்சிகளாக இருந்தன.

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. 68 தொகுதிகளில் 40 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது.

bjp,cm,victory,congress,elections,chief minister,mlas ,காங்கிரஸ், தேர்தல், முதல்வர், எம்எல்ஏக்கள், அழைப்பு

சுயேட்சை கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை கொடுத்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர்.

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் யார்? என ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு சிம்லாவில் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|