Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பு ..அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பு ..அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்

By: vaithegi Mon, 01 Aug 2022 12:57:27 PM

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பு ..அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்

இந்தியா: இந்தியாவில் ஆதார் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வாக்காளர் அடையாள அட்டை தான் அனைத்து தேவைகளுக்கும் பயன்பட்டு வந்தது. தற்போது ஆதார் என்பது தான் முக்கிய அடையாளமாக விளங்குகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதாருடன் தொலைபேசி எண் இணைக்கப்பட வேண்டும் என்று UIDAI அறிவித்திருந்தது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே அரசின் மூலம் பெறப்படும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாட்டில் நூறில் எண்பது சதவீதம் பேர் ஆதார் அட்டையுடன் தொலைபேசி எண்ணை இணைத்து விட்டார்.

voter id card,aadhaar card,link ,வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை,இணைப்பு

அந்த வகையில் தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள போலி வாக்காளர்களை கண்டுபிடிப்பதற்காக இச்செயல்முறையை கொண்டு வரப்போவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகளை வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இதை குறித்து முக்கிய ஆலோசனை நடத்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags :