Advertisement

லடாக் எல்லை குறித்து நடந்த ஆலோசனை

By: Nagaraj Fri, 27 Jan 2023 11:26:32 PM

லடாக் எல்லை குறித்து  நடந்த ஆலோசனை

புதுடெல்லி: லடாக் எல்லை குறித்து காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள லடாக் எல்லையை சுற்றுலா தலமாக மாற்றும் திட்டம் நடந்து வருகிறது.

லடாக் எல்லையை ஒட்டிய சீனப் பகுதிகளில் சீன ராணுவம் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் லடாக் எல்லை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

border,ladakh,tourist destination , எல்லை, சுற்றுலாத் தலம், லடாக்

அதில், “லடாக் எல்லைப் பகுதிகளில் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மக்கள் நடமாட்டத்தை அதிகரிக்க வேண்டும்.

அதற்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். இவ்வாறு, லடாக் எல்லை குறித்து காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

Tags :
|
|