Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் உள்ள கலை , அறிவியல் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் உள்ள கலை , அறிவியல் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு தொடக்கம்

By: vaithegi Mon, 29 May 2023 09:55:00 AM

தமிழகத்தில் உள்ள கலை , அறிவியல் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 7ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. இளநிலை முதலாமாண்டு பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே 8-ம் தேதி தொடங்கிய நிலையில் ஏராளமான மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து உள்ளனர். இதையடுத்து இதுவரை மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது. இதனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே தாங்கள் கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதிலும் குறிப்பாக, இந்தாண்டு பி.காம் படிப்புகளில் சேர அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும், பிஎஸ்சி வேதியியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

consultancy,arts and science college ,கலந்தாய்வு ,கலை , அறிவியல் கல்லூரி

மேலும் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழ் மொழி பட்டப்படிப்பு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தனித்தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் 31-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், வருகிற ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெறுகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 22-ந்தேதி வகுப்புகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags :