Advertisement

வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து இன்று ஆலோசனை

By: Nagaraj Tue, 03 Nov 2020 5:09:06 PM

வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து இன்று ஆலோசனை

வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் திருத்த பணிகள் தொடங்கும். அதற்காக வாக்காளர்களிடம் இருந்து பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் போன்றவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்படும்.

மேலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்களிப்பில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதியிலிருந்து டிசம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெறப்படும்.

draft voter,list,polling station,agents,advice ,வரைவு வாக்காளர், பட்டியல், வாக்குச்சாவடி, முகவர்கள், ஆலோசனை

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு, ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு வழக்கமாக அனைத்துக்கட்சி கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும்.

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் பற்றிய ஆலோசனைகளை அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கேட்டு பெரும். இந்த வகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், இரட்டை பெயர் பதிவு, நீக்கம், வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

Tags :
|
|