Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அதிகரித்த கொரோனாவால் முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் அதிகரித்த கொரோனாவால் முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

By: vaithegi Sat, 11 June 2022 6:36:49 PM

தமிழகத்தில் அதிகரித்த கொரோனாவால் முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை :
கடந்த சில வருடங்களாக கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடிங்கி இருந்தார்கள். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பதிக்கப்பட்டு. பிறகு படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து வந்தால் மக்களின் இயல்பு நிலை தொடங்கியது

ஆனால். தற்போது மீண்டும் கொரோனா அதிகரிக்க துவங்கியுள்ளது. ஆரம்பத்தில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலுமே கொரோனாவின் பரவல் அதிகரித்து வருகிறது.

corona,chief,consultative meeting community space ,கொரோனா, முதல்வர், ஆலோசனை கூட்டம் சமூக இடைவெளி

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தை அடுத்து ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லும்படியும், சமூக இடைவெளியை பொது இடங்களில் பின்பற்ற கோரியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்கள் கட்டாயமாக இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமும் 100 க்கு கீழ் மட்டுமே கொரோனா பரவல் பதிவாகி வந்த நிலையில், நேற்று மட்டுமே தமிழகத்தில் 219 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

Tags :
|
|