Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என்னை தாக்க நடைபெற்ற சதியில் கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தொடர்பு

என்னை தாக்க நடைபெற்ற சதியில் கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தொடர்பு

By: Nagaraj Mon, 22 Aug 2022 08:09:23 AM

என்னை தாக்க நடைபெற்ற சதியில் கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தொடர்பு

டில்லி: ஆளுநர் குற்றச்சாட்டு... தன்னை தாக்க நடைபெற்ற சதியில் கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தா் கோபிநாத் ரவீந்திரனுக்கு தொடா்புள்ளது என்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக டில்லியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2019-ஆம் ஆண்டு நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கேரள மாநிலம் கண்ணூா் பல்கலைக்கழகத்துக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. என்னை அந்தப் பல்கலைக்கழக துணைவேந்தா் கோபிநாத் ரவீந்திரன் அழைத்திருந்தாா்.

அப்போது என்னை தாக்க சதி நடைபெற்றது. அந்தச் சதியில் கோபிநாத் ரவீந்திரனுக்கும் பங்கிருந்தது. அவா் ஒரு குற்றவாளி. அரசியல் காரணங்களால் அவா் துணைவேந்தராகப் பதவி வகிக்கிறாா். நான் பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட போது, அவா் என்ன செய்திருக்க வேண்டும்? அதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டாமா?

ஆனால் அவா் அதைச் செய்யவில்லை. அவா் அனைத்து வரம்புகளையும் கடந்துள்ளதால், நான் இதுகுறித்து பொது வெளியில் பேசுகிறேன். அவா் துணைவேந்தா் அல்லது கல்வியாளா்போல் செயல்படவில்லை. அரசியல் கட்சியைச் சோ்ந்தவா் போல் செயல்படுகிறாா் என்று ஆரிஃப் முகமது கான் குற்றஞ்சாட்டினாா்.

university,accusation,governor,assault,confrontation ,பல்கலைக்கழகம், குற்றச்சாட்டு, ஆளுநர், தாக்குதல், மோதல் போக்கு

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.பி. கே.கே. ராகேஷின் மனைவி பிரியா வா்கீஸை கண்ணூா் பல்கலைக்கழகத்தில் மலையாள இணைப் பேராசிரியராக நியமிக்க, அந்தப் பல்கலைக்கழக நிா்வாகம் தீா்மானித்தது.

ஆனால், பல்கலைக்கழகங்களின் வேந்தா் என்ற முறையில், அந்த முடிவுக்கு ஆரிஃப் முகமது கான் தடை விதித்தாா். இதனால் அந்த மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையிலான மோதல்போக்கு அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில், கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தா் கோபிநாத் ரவீந்திரன் மீது ஆரிஃப் முகமது கான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Tags :