Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜஸ்தானில் போட்டி எம்எல்ஏ கூட்டம்... விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ்

ராஜஸ்தானில் போட்டி எம்எல்ஏ கூட்டம்... விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ்

By: Nagaraj Wed, 28 Sept 2022 10:35:36 AM

ராஜஸ்தானில் போட்டி எம்எல்ஏ கூட்டம்... விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ்

ராஜஸ்தான்: நோட்டீஸ் அனுப்பியது தலைமை... ராஜஸ்தானில் போட்டி எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை நடத்திய விவகாரத்தில் விளக்கம் கேட்டு முதல்வா் அசோக் கெலாட் ஆதரவாளா்கள் 3 பேருக்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியது.

மேலிடப் பாா்வையாளா்கள் அளித்த பரிந்துரையை தொடா்ந்து இந்த நடவடிக்கையை காங்கிரஸ் மேற்கொண்டது. காங்கிரஸ் கட்சித் தலைவா் தோ்தலில் போட்டியிடும் அசோக் கெலாட், அதில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் மாநில முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதையடுத்து, மாநிலத்துக்கு புதிய முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டு வருகிறது. இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் கெலாட் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 82 போ் கலந்துகொள்ளாமல் போட்டிக் கூட்டத்தை நடத்தினா். சச்சின் பைலட்டை முதல்வராக்குவதற்கு அவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

notice,principal,report,matter,recommendation,contest meeting ,நோட்டீஸ், முதல்வர், அறிக்கை, விவகாரம், பரிந்துரை, போட்டி கூட்டம்

Tags :
|
|
|